Skip to main content

youtube

கதாநாயகிகள் சம்பள பட்டியல் நயன்தாரா, அனுஷ்காவுக்கு ரூ.2½ கோடி 3–வது இடத்தில் தமன்னா

ஐதராபாத், நடிகைகள் நயன்தாராவும் அனுஷ்காவும் ஒரு படத்துக்கு ரூ.2½ கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். தமன்னா 3–வது இடத்தில் இருக்கிறார்.சம்பளம் உயர்வு

பிரபல நடிகைகள் சம்பளத்தை திடீர் என உயர்த்தியுள்ளனர். தமிழ் படங்கள் ஆந்திரா, கேரளாவிலும் வசூல் குவிக்கிறது. தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு லாபம் ஈட்டுகின்றன. இதனால் சம்பளத்தை ஏற்றியுள்ளார்கள்.தமிழ், தெலுங்கு கதாநாயகர்கள் ரூ.10 கோடியில் இருந்து ரூ.40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோல் கதாநாயகிகள் வாங்கும் சம்பள பட்டியலும் வெளிவந்துள்ளது.முதல் இடத்தில் நயன்தாரா

நடிகைகள் சம்பள பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.2½ கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. தமிழ் படஉலகில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகிறார். காதல் சர்ச்சைகளில் சிக்கியும் அவர் மார்க்கெட் சரியவில்லை. தற்போது 'மாயா, நானும் ரவுடிதான், தனி ஒருவன், இது நம்ம ஆளு, காஸ்மோரா, திருநாள்' ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.சம்பள பட்டியலில் அனுஷ்காவும் நயன்தாராவுக்கு இணையாக இருக்கிறார். இவர் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2½ கோடி வரை வாங்குகிறார். இவர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த 'பாகுபலி' படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் இப்படம் வெளியானது. அடுத்து இதன் இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. 'ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி' படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.3–வது இடம்

தமன்னா ரூ.1¾ கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 'பாகுபலி' படம் தமன்னா மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தலாமா? என்று இவர் யோசிக்கிறாராம்.ஸ்ரேயா ரூ.1 கோடி வாங்குகிறார். இவருக்கு தமிழில் படங்கள் இல்லை. இந்தியில் நடித்த 'திரிஷ்யம்' படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. காஜல் அகர்வாலும் ரூ.1 கோடி வாங்குகிறார். இவர் தற்போது விஷால் ஜோடியாக 'பாயும் புலி' படத்தில் நடிக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடிக்கிறார்.திரிஷா

திரிஷா ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வாங்குகிறார். கமல்ஹாசன் ஜோடியாக திரிஷா நடிக்கும் 'தூங்காவனம்' படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அரண்மனை இரண்டாம் பாகம் படமும் தொடர்ந்து வெளிவர இருக்கிறதுசுருதிஹாசன், ஹன்சிகா, சமந்தா, பிரியாமணி ஆகியோர் ரூ.70 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது

News source :daily thanthi

Comments

Popular posts from this blog

TAMIL LADY POLICE NAMITHA NEW

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296